முகப்பு
திருப்பூர்

காங்கயம் நகராட்சிக்கு வரியை செலுத்தாவிட்டால் நடவடிக்கை: நகராட்சி ஆணையர்

காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் சட்ட

Updated On : 25 டிசம்பர் 2018, 8:20 am IST
பகிர்:

காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
  இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் தேவிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 காங்கயம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம்,  நகராட்சிக் கடை வாடகை ஆகியவற்றை நகராட்சி அலுவலகத்தில் உடன் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.  மேலும், நடப்பு ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய வரி இனங்களையும் செலுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
  வரி இனங்களைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை,  நீதிமன்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களின் வசதிக்கேற்ப சனிக்கிழமை நாள்களிலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வசூல் மையம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments