முகப்பு
திருப்பூர்

தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர்

வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:22 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
 இது குறித்து நகராட்சி ஆணையர் அ.சங்கர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
  வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பைகள், மேஜை விரிப்புகள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள், கேரி பேக்குகள், கவர்கள், பிளாஸ்டிக் பூச்சு உள்ள தட்டுகள், டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு  தடை விதிக்கப்பட்டுள்ளது.
 எனவே, வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள், பொதுமக்கள் மேற்கண்ட பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக பாக்கு மட்டைத் தட்டு, இலை, பேப்பர் மேஜை விரிப்பு, தாமரை இலை, சணல் பை, அலுமினியம், சில்வர் தட்டு ஆகியவற்றை உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தடையைமீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை இருப்பு வைத்தல், விற்பனை செய்தல், உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments