லாரி-கார் மோதல்: 4 பேர் காயம்
தாராபுரம் அருகே லாரி யும், காரும் மோதிக் கொண்டதில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
தாராபுரம் அருகே லாரி யும், காரும் மோதிக் கொண்டதில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
தாராபுரம், சின்னப்புத்தூர் அருகே உள்ள பாப்பனூத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (22), விவசாயி. இவர் தனது தாய் சௌந்தரி (42), பெரியம்மா கனகமணி (50), பாட்டி விசாலாட்சி (65) ஆகியோருடன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில், பொள்ளாச்சி சாலை பஞ்சபட்டி பாலம் அருகே இந்த காரும், எதிரே வந்து கொண்டிருந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.