சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
திருப்பூர்: திருப்பூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சலில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார் (43). இவர் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், வீட்டு உரிமையாளரின் 9 வயது சிறுமி சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமிக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.