அவிநாசியில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்படவில்லை
ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக அவிநாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என
ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக அவிநாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்தனர். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் முடங்கியன.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்துக்கு
பொறுப்பாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் கருப்பன், ரமேஷ்குமார், துரைசாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.