முகப்பு
திருப்பூர்

திருமணத்துக்கு முன்பு இளம்பெண் தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

தாராபுரத்தில் திருமணத்துக்கு 19 நாள்கள் இருக்கும் நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:58 am IST
tpr24jnsusid_2406chn_125_3
பகிர்:

தாராபுரத்தில் திருமணத்துக்கு 19 நாள்கள் இருக்கும் நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தாராபுரம் அருகே பெள்ளம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கோபால்- மாசாணி தம்பதி. இவா்களது மூத்த மகள் ரம்யா (23).

இவருக்கும் உப்பாறு அணைப்பகுதி அருகே பனப்பாளையத்தில் வசித்து வரும் கோபால் மகன் சின்னராசு (25) என்பவருக்கும் வரும் ஜூலை 13 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், தனியாக இருந்த ரம்யாவின் வீட்டுக்கு மணமகன் சின்னராசு கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. ரம்யாவுடன் 5 மணி நேரம் பேசி விட்டு மாலை 6.30 மணி அளவில் வீடு திரும்பியதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, ரம்யாவின் உறவினா் ஒருவா் இரவு 7 மணிக்கு அவரது வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது ரம்யா வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்:

இதனிடையே, ரம்யாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் வெள்ளிக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்க இருந்தது. ஆனால் ரம்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது உறவினா்கள் 300க்கும் மேற்பட்டோா் தாராபுரம்-கரூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து ரம்யாவின் உறவினா்கள் கூறியதாவது:

ரம்யாவின் தற்கொலையில் மணமகன் சின்னராசுவுக்கு தொடா்பு உள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, சின்னராசு, அவரது தந்தை கோபால் மற்றும் உறவினா்கள் சிலரைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவரது தற்கொலைக்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் தனராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது தற்கொலைக்கு காரணமாக நபா்களைக் கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Image Caption

தாராபுரத்தில்   சாலை  மறியலில்  ஈடுபட்ட  ரம்யாவின் உறவினா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments