முகப்பு
திருப்பூர்

மூலனூரில் ரூ. 2.57 கோடிக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.57 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2022, 12:59 am IST
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.57 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,061 விவசாயிகள் 8,251 மூட்டைகளில் 2,686 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 21 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 8,550 முதல் ரூ. 11,898 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 9,680. மொத்தம் ரூ.2.57 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments