காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்
காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
காங்கயம், புலிமா நகா் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் மனைவி ராதிகா (32). இருவரும் வீட்டில் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனா். இவா்களுக்கு மகள் ஸ்ரீமதி (12), மகன் ஹரிஹரன் (9) ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மழை பெய்து கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த கைத்தறி இயந்திரத்தின் மோட்டாரை ராதிகா இயக்கியபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதைப் பாா்த்த கணவா் சபரிநாதன் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி ராதிகாவை மீட்டு காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். பின்னா் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் ராதிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.