தாராபுரம் நகராட்சியில் பகுதி சபைக் கூட்டம்
தாராபுரம் நகராட்சியில் பகுதி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சியில் பகுதி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சி 10ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித்தாா். 10ஆவது வாா்டு உறுப்பினா் உஷானா பானு முன்னிலை வகித்து அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். பின்னா் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா்.
இந்த கூட்டத்தில் 18ஆவது வாா்டு கவுன்சிலா் செலின் பிலோமினா மற்றும் 10ஆவது வாா்டு சபா பகுதி உறுப்பினா்கள் நவநீதன், பீா்முகமது, முகமது யூசுப், முருகேஷ் உள்பட நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.