முகப்பு
இந்தியா

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையின் பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு குட்டியால் பரபரப்பு நிலவியது.

Updated On : 19 ஜூன் 2026, 8:39 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையின் பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு குட்டியால் பரபரப்பு நிலவியது.

மத்தியபிரதேச மாநிலம், சத்னா மாவட்ட மருத்துவமனையில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பிரசவ அறைக்குள் மலைப்பாம்பு குட்டி ஒன்று நுழைந்தது.

இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவிய நிலையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தப் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேஜைகளுக்கு இடையே ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு குட்டியை செவிலியர் ஒருவர் முதலில் பார்த்திருக்கிறார். மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகப் பிரசவத்தில் உள்ள பெண்கள் உள்ளிட்ட நோயாளிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.

பின்னர் சுகாதாரப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, அந்தப் பாம்பு பிடிக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே விடப்பட்டது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சத்னா மாவட்ட மருத்துவமனையின் உதவி மேலாளர் மருத்துவர் திரேந்திர வர்மா இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, பிரசவ அறையை ஒட்டியுள்ள கழிவறை ஜன்னலுக்கு வெளியே வளர்ந்துள்ள புதர்கள் மற்றும் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் வழியாக அந்தப் பாம்பு உள்ளே நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

summary

Amid the cries of newborn babies and bustle of late-night deliveries, a baby python slipped into the labour room of a district hospital in Madhya Pradesh's Satna district, triggering panic for some time before it was rescued without anyone getting hurt.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments