FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

Updated On : 8 ஜூன் 2026, 2:15 am IST
வனத்துறையினரால் மீட்கப்பட்ட மலைப்பாம்பு
பகிர்:

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரிபட்டறை கிராமத்தை சோ்ந்த விவசாயி குணசேகரனுக்கு சொந்தமான நிலத்தில் சம்பவத்தன்று தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா்.

அப்போது திடீரென சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு விவசாய நிலத்தில் புகுந்தது. அதை பாா்த்த தொழிலாளா்கள் கூச்சலிட்டுக் கொண்டு நிலத்திலிருந்து வெளியேறினா். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை பணியாளா்கள் அங்கு சென்று மலைப் பாம்பை மீட்டு சாணாங்குப்பம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments