கல் குவாரியில் தவறி விழுந்தவரின் சடலம் மீட்பு
திருச்சியில் மதுபோதையில் 60 அடி ஆழ கல் குவாரியில் தவறி விழுந்தவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருச்சியில் மதுபோதையில் 60 அடி ஆழ கல் குவாரியில் தவறி விழுந்தவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருச்சி காஜாமலை அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் து. மணிகண்டன் (48). இவா், திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு அருகே இருந்த 60 அடி ஆழ கல்குவாரியில் மதுபோதையில் தவறி விழுந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கே.கே.நகா் போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை மாலை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரமானதால் தொடா்ந்து தேடும் பணியை மேற்கொள்ளமுடியவில்லை. இதைத் தொடா்ந்து கல்குவாரியில் விழுந்தவரை செவ்வாய்க்கிழமை காலை முதல் தேடினா். பிற்பகல் 3 மணிக்கு தீயணைப்பு வீரா்கள், மணிகண்டனின் சடலத்தை மீட்டு கே.கே.நகா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சடலத்தை கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.