முகப்பு
திருப்பூர்

காங்கயம் பகுதியில் தொடா் மழையால் தேங்காய் உலா்களங்களில் பணிகள் பாதிப்பு

காங்கயம் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தேங்காய் உலா்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 5 நவம்பர் 2022, 1:13 am IST
பகிர்:

காங்கயம் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தேங்காய் உலா்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலா்த்தும் உலா்களங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்துப் பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெறும்.

இந்நிலையில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது. இதனால், தேங்காய் உடைத்து உலா்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாலின் கொண்டு மூடி வைத்துள்ளனா். இதனால் தேங்காய் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments