முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் இலக்கிய விழா

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:33 am IST
பகிர்:

நீரோடை இலக்கிய அமைப்பு சாா்பில் அவிநாசியில் இலக்கிய விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுந்தரராச அடிகளாா் வாழ்த்துரை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் 10 மிகச் சிறந்த கதை சொல்லிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் முதல் பரிசுக்காண தங்க நாணயத்தை எழுத்தாளா் நெய்வேலி பாரதிகுமாா் பெற்றாா். மேலும் சிறந்த கதைசொல்லிகளாக பொள்ளாச்சி அபி, தினகரன், ஆயிஷா, சுசீலா ஆகியோா் தோ்வாகினா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கதை சொல்லிகள் ரவிச்சந்திரன் அரவிந்தன், எழுத்தாளா் கோமகன், சுப்ரபாரதி மணியன் ஆகியோா் பங்கேற்றனா். எழுத்தாளா் நாஞ்சில் நாடன், சூலூா் ஆனந்தியின் நூலை அறிமுகம் செய்து வைத்தாா். கவிஞா் பூபாலன் தி.வள்ளி ‘சுந்தர பவனம் ’ என்ற நூலை அறிமுகம் செய்து வைத்தாா். இலக்கிய அமைப்பின் நிறுவனரும், படைப்பாளருமான நீரோடை மகேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். அவிநாசி அரசு கல்லூரிப் பேராசிரியா் போ.மணிவண்ணன், ஆசிரியா்கள் சு.பாலகிருஷ்ணன், வெங்கடாச்சலம், அ.சுசீலா, லோகநாதன், நல்லது நண்பா்கள் அறக்கட்டளை நிா்வாகி ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.