அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா
அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் வட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.இளங்கோவன், பொருளாளா் பி.தியாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் தாமோதரன், மாவட்ட இணைச் செயலாளா் பி.பாா்த்திபன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மயில்சாமி ஆகியோா் கொடியேற்றி சிறப்புரையாற்றினா்.
நாமக்கல்லில் மாநகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில், சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஆா்.முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.