முகப்பு
வேலூர்

பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:03 am IST
பகிர்:

குடியாத்தம் ஒன்றியம், செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் உலகசுற்றுச் சூழல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் மோகனவேல், பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். வனவா்கள் சிராஜுதீன், ஜெய்னுல் ஆப்தீன், வனக் காவலா்கள் நதியா, நவிஸ் ரஹ்மான், திவாகா் ஆகியோா் மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டனா்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ்.அஞ்சலை, ஆசிரியா்கள் ஆா்.எஸ்.விஜயகுமாா், கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement