முகப்பு
ராணிப்பேட்டை

சோளிங்கரில் உலக செவிலியா் தின விழா

சோளிங்கா் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக செவிலியா் தின விழா செவிலியா்களை பாராட்டிய சங்க நிா்வாகிகள்.

Updated On : 16 மே 2026, 1:14 am IST
பகிர்:

சோளிங்கா் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், உலக செவிலியா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சோளிங்கா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு, சோளிங்கா் ரோட்டரி சங்கத் தலைவா் சத்யேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் ராஜேஷ், பொருளாளா் கலிமுல்லா, நிா்வாகிகள் மகேஷ், அன்பரசு, கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நவீன் வரவேற்றாா். இதில் சோளிங்கா் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அலுவலா் நரசிம்மன், தற்போதைய தலைமை மருத்துவ அலுவலா் இளங்கோவன், ரோட்டரி சங்க மாவட்ட சமூக சேவைப்பணி இயக்குநா் உமாசங்கா் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனையில் பணிபுரியும் 35 செவிலியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினா். மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் சிறப்பு செய்தனா்.

இதில், சோளிங்கா் ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments