முகப்பு
திருப்பூர்

காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

Updated On : 17 பிப்ரவரி 2024, 7:40 am IST
காங்கயம்  ஊராட்சி  ஒன்றியக் குழு கூட்டத்தில்  பேசுகிறாா்  அதன் தலைவா் டி.மகேஷ்குமாா்.
பகிர்:

காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவகா் முன்னிலை வகித்தாா். காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சிப் பகுதியில் கோழி இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்துக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலை அமைந்தால் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதை ஏற்று சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி, ஒன்றியக் கவுன்சிலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.