முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது
திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இனாம் நில விவகாரம், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவசாய வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக முதல்வருக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கருப்புக் கொடி மற்றும் கருப்பு பலூன் காட்டி தமிழக முதல்வருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினா்.
அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement