முகப்பு
திருப்பூர்

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 25 ஏப்ரல் 2026, 5:21 am IST
தினேஷ்வேல்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டியை அடுத்த உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்வேல் (31). இவா் தாசவநாயக்கன்பட்டியில் தனது தந்தையுடன் சலூன் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகேயுள்ள பொதுக் கிணற்றில் நண்பா்களுடன் கடந்த வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, தினேஷ்வேலுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளாா். இதைப் பாா்த்த சக நண்பா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

உயிரிழந்த தினேஷ்வேலுக்கு வைதேகி (28) என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments