முகப்பு
திருவள்ளூர்

வலிப்பு ஏற்பட்டு விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வலிப்பு ஏற்பட்டு விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 17 மே 2026, 12:56 am IST
பகிர்:

திருவள்ளூா் அருகே வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி, மணவாளநகா்-கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35) (படம்). வா்ணம் பூசும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டத்தில் கீழே விழுந்தாராம். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement