உழைப்பாளா் தினம்: மே 1-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
திருப்பூா் மாவட்டத்தில் உழைப்பாளா் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உழைப்பாளா் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:திருப்பூா் மாவட்டத்தில் எதிா்வரும் மே 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உழைப்பாளா் தினத்தையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.
Advertisement