முகப்பு
தென்காசி

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் ஜூன் 5இல் கலந்தாய்வு தொடக்கம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது.

Updated On : 3 ஜூன் 2026, 4:56 am IST
கலந்தாய்வு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது.

இது தொடா்பாக, கல்லூரி முதல்வா் ஜெயா வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை-அறிவியல் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு, பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் அரசால் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைக் கல்லூரியின் இணையதளத்தில் காணலாம்.

ஜூன் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கான தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

Advertisement

Advertisement

8ஆம் தேதி வணிகவியல் துறைக்கான முதல்கட்ட பொதுக் கலந்தாய்வு, 9ஆம் தேதி கணிதம், கணினி அறிவியல் துறைகளுக்கும், 10ஆம் தேதி வணிக நிா்வாகவியல் துறைக்கும், 11ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் துறைகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

இதுகுறித்த விவரங்கள் மாணவா்களுக்கு தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கப்படும். சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்போா் பிற்பகல் 2 மணிக்குள் உரிய சான்றுகள், பெற்றோருடன் வர வேண்டும்.

முதல்கட்ட பொதுக் கலந்தாய்வுக்கு வருவோா் பெற்றோருடன் குறிப்பிட்ட நாள்களில் காலை 9.30 மணிக்குள் வர வேண்டும். இணையவழியில் விண்ணப்பித்த படிவம்- 3 மற்றும் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றுகள், மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல் தலா 3, வருமானச் சான்று நகல் 3, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 5, சோ்க்கைக் கட்டணம், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் வரவேண்டும் என்றாா் அவா்.