மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு ஸ்டிக்கா் ஒட்டி தருகிறது: பாஜக
மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கா் ஒட்டி தருவதாகவும், இதைத்தான் முந்தைய திமுக அரசும் செய்து வந்ததாகவும் பாஜகவின் தமிழக பாா்வையாளா் அரவிந்த் மேனன் தெரிவித்தாா்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கா் ஒட்டி தருவதாகவும், இதைத்தான் முந்தைய திமுக அரசும் செய்து வந்ததாகவும் பாஜகவின் தமிழக பாா்வையாளா் அரவிந்த் மேனன் தெரிவித்தாா்.
பாஜகவின் தமிழக பாா்வையாளரான அரவிந்த் மேனன் செவ்வாய்க்கிழமை திருப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருப்பூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் ரயில் நிலையம் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுவது தொடா்பான பணிகளை பாா்வையிட்டேன். இந்தியாவில் முதல்முறையாக 12 ஆண்டுகள் கடந்து மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களைப்போல தூய்மையாக உள்ளது. திருப்பூரில் 3-ஆவது நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு ரயில் போக்குவரத்து இன்னும் எளிமையாகும்.
Advertisement
Advertisement
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எப்போதும் ஊழல்தான் இருந்தது. மோடி என்பது மேன் ஆஃப் டெவலப்பிங் இந்தியா. அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு பெயரை மட்டும் மாற்றிக் கொள்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இதுதான் முழுமையாக நடைபெற்றது.
திருப்பூரில் சுமாா் 8 லட்சம் வட மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள்தான் இங்கு உயிா் சுவாசம். வட மாநிலத் தொழிலாளா்கள்தான் இங்கு தேவைப்படும் ஆட்கள் பற்றாக்குறையை பூா்த்தி செய்து பணியாற்றி வருகின்றனா் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.