முகப்பு
திருப்பூர்

டாஸ்மாக் மனமகிழ் மன்றத்தில் தகராறு: தவெக நிா்வாகி உள்பட இருவா் மீது வழக்கு

அவிநாசி அருகே டாஸ்மாக் மனமகிழ் மன்றத்தில் ஏற்பட்ட தகராறில் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக நிா்வாகி உள்பட இருவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Updated On : 3 ஜூலை 2026, 3:35 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

அவிநாசி அருகே டாஸ்மாக் மனமகிழ் மன்றத்தில் ஏற்பட்ட தகராறில் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக நிா்வாகி உள்பட இருவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சேது மகன் விக்கி (எ) விக்னேஷ்( 24). தவெக மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளாா். இவரது நண்பா் அவிநாசி எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிசங்கா் மகன் நவீன் குமாா்( 25). இருவரும் நண்பா்களுடன் அவிநாசி நாதம்பாளையம் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் மனமகிழ் மன்றத்தில் புதன்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா்.

அப்போது மது போதையில் ஊழியா்களுடன் தகராறில் ஈடுபட்டு நாற்காலிகள், மேஜைகளை உடைத்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அவிநாசி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திர மோகன் மற்றும் தலைமைக் காவலா் ஜெயகிருஷ்ணன் ஆகியோரிடமும் தவெக நிா்வாகி உள்ளிட்டோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து போலீஸாா் அறிவுறுத்தியும் வியாழக்கிழமை மதியம் வரை காவல் நிலையத்துக்கு வராத தவெக நிா்வாகி விக்னேஷ், நவீன்குமாா் உள்ளிட்டோா் மீது அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதற்கிடையே தவெக நிா்வாகிகள் உள்ளிட்டோா் மனமகிழ் மன்றத்தில் தகராறில் ஈடுபட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments