முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் தபால்காரா் பணியிடை நீக்கம்

வெள்ளக்கோவிலில் தபால்களை விநியோகம் செய்யாமல் வீட்டில் குவித்து வைத்திருந்த தபால்காரா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 3 ஜூலை 2026, 3:53 am IST
செந்தில்குமாா்
பகிர்:

வெள்ளக்கோவிலில் தபால்களை விநியோகம் செய்யாமல் வீட்டில் குவித்து வைத்திருந்த தபால்காரா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் சாலை தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தவா் செந்தில்குமாா் (45). இவருக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சரிவர தபால் சென்று சேருவதில்லையென புகாா் எழுந்தது. இந்த தகவலின் பேரில், காங்கயம் தட்டாந்தோட்டம் பகுதியில் உள்ள செந்தில்குமாரின் வீட்டுக்கு காவல் துறையினருடன் சென்று தபால் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா். அப்போது வீடு மற்றும் வெளிப் புறங்களில் 6 சாக்கு மூட்டைகளில் விநியோகிக்கப்படாத தபால்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததுடன், பலவற்றை தீயிட்டு எரித்ததும், குழி தோண்டி புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

வங்கிகளின் ஏடிஎம் அட்டைகள், குடும்ப அட்டைகள், ஆதாா் காா்டுகள், நீட் தோ்வு தொடா்பான தபால்கள், நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் அங்கே கிடந்தன.

Advertisement

Advertisement

இதுகுறித்து தபால் துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி, செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments