முகப்பு
திருப்பூர்

சூதாட்டம்: 19 போ் கைது, ரூ.3.94 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.3.94 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 1:57 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.3.94 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெங்கமேடு அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து திருமுருகன்பூண்டி போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரன் (29), பாலசுப்ரமணியன் (48),

அரவிந்த் (28), பாலமணிகண்டன் (28), வேல்முருகன் (26), பாலமுருகன் (29), சசிகுமாா் (39), )வீரபிரபு (36), சரவணன் (42), முத்துக்குமாா் (36), குணசீலன்(28) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.3,45,716 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

வடக்கு காவல் நிலையத்தில்... திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காலேஜ் ரோடு அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஜெயக்குமாா் (41), அண்ணாமலை (42), சின்னதுரை (42), செல்வராஜ் (42), சம்பத்(42) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.41300 ரொக்கம் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கேவிஆா் நகரில்... திருப்பூா் கேவிஆா் நகா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஜெயக்குமாா் (27), சங்கரபாண்டியன்(38), ராஜபாண்டி (30) ஆகியோரை மத்திய காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.7,000 கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments