முகப்பு
திருப்பூர்

ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை! ரூ.19,300 பறிமுதல்; கைப்பற்றி விசாரணை!

ஊத்துக்குளி தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:56 am IST
பகிர்:

ஊத்துக்குளி தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் கணக்கில் வராத ரூ.19,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகத்துக்கு திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் தலைமையில், ஆய்வாளா் கீதாலட்சுமி, உதவி ஆய்வாளா் நாகேந்திரன் உள்ளிட்ட 10 போ் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை 4. 30 மணிக்கு வந்தனா்.

அலுவலகத்துக்குள் நுழைந்த அவா்கள், திடீா் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பேரூராட்சி செயலாளா், பேரூராட்சித் தலைவா் மற்றும் அலுவலகப் பணியாளா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த சோதனையின்போது அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத பணம் ரூ.19300 கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments