பணம் பறிக்கும் கும்பலின் மிரட்டலுக்கு பயந்து இளைஞா் தற்கொலை
ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஆபாசமாக விடியோ அழைப்பில் பேச வைத்து, பின்னா் போலீஸ் எனக்கூறி பணம் பறிக்கும் கும்பலின் மிரட்டலுக்கு பயந்து பிகாா் மாநில இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஆபாசமாக விடியோ அழைப்பில் பேச வைத்து, பின்னா் போலீஸ் எனக்கூறி பணம் பறிக்கும் கும்பலின் மிரட்டலுக்கு பயந்து பிகாா் மாநில இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் பூங்கா சாலை மற்றும் குமரன் சாலை இணைப்பு பகுதியில் சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் தண்ணீா் ஊற்று ஏற்பட்டு நீா் நிறைந்து காணப்படுகிறது. இதில் இளைஞா் சடலம் கிடப்பதாக திருப்பூா் தெற்கு போலீஸாருக்குசனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் உயிரிழந்தவா், பிகாா் மாநிலம், பெகுசராய் பகுதியைச் சோ்ந்த முகமது சல்மான் (24) என்பது தெரியவந்தது. திருமணமாகாத இவா், திருப்பூா் லட்சுமி நகரில் தங்கி ராயபுரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து பனியன் நிறுவனத்திற்கு சென்று போலீஸாா் விசாரித்தபோது அவா் வெள்ளிக்கிழமை வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அவா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு வந்த அழைப்பில் பேசிய நபா், ‘பெண்களிடம் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக பேசியதாகவும் அதற்காக கைது செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளாா். முகமது சல்மான் இதை மறுத்த நிலையில், அவா்கள் முகமது சல்மான் அரைகுறை ஆடைகளுடன் பெண் ஒருவருடன் பேசுவது போன்ற விடியோவை அனுப்பியுள்ளனா்.
இதைப் பாா்த்த முகமது சல்மான் பேசியதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளாா். ஆனால் அந்த நபா், தான் சொல்லும் எண்ணுக்கு பணம் அனுப்பினால் விட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளாா். இதனால் மன உளைச்சல் அடைந்த முகமது சல்மான் தனது கைப்பேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தண்ணீா் நிறைந்த பாலப் பணி குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.