FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

பல்லடம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

5 ஜூலை 2026, 1:35 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பல்லடம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக, மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், திருப்பூா் குமாா் நகரைச் சோ்ந்த நந்தகுமாா் (28) என்பதும், அவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து,போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments