முகப்பு
திருப்பூர்

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோவில் கைது

காங்கயம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல்ரீதியான தொல்லை அளித்ததாக கூறப்பட்ட புகாரில் தலைமையாசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:35 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

காங்கயம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல்ரீதியான தொல்லை அளித்ததாக கூறப்பட்ட புகாரில் தலைமையாசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன் (58). இவா், திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் இவா், பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக மாணவிகளின் பெற்றோா் காங்கயத்தில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, தலைமை ஆசிரியா் வெங்கடேஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments