முகப்பு
திருப்பூர்

சேவூா் அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

Updated On : 7 ஜூலை 2026, 2:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

சேவூா் அருகே பாப்பாங்குளத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.

சேவூா் அருகே பாப்பாங்குளம் ஊராட்சிப் பகுதியில் வசித்து வருபவா் சென்னியப்பன் மகன் வெற்றிவேல் (60). இவா், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளா்ப்பையே வாழ்வாராதமாக கொண்டுள்ளாா். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை திங்கள்கிழமை மேய்ந்து கொண்டிருந்தாா்.

அப்போது அப்பகுதிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து காயப்படுத்தின. இதைப் பாா்த்த பொதுமக்கள் உள்ளிட்டோா் காயமடைந்த ஆடுகளுக்கு முதலுதவி அளித்தனா். இருப்பினும் 3 ஆடு உயிரிழந்தன. மேலும் காயமடைந்த ஒரு ஆட்டுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக முதலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இது தோட்டம், காடுகளில் மேய்ந்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்டவற்றை கடித்துள்ளன. கால்நடை வளா்ப்பு அதிகம் உள்ள எங்கள் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments