முகப்பு
திருப்பூர்

தெரு நாய்கள் கடித்து 4 கால்நடைகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 கால்நடைகள் உயிரிழந்தன.

Updated On : 8 ஜூலை 2026, 5:47 am IST
தெருநாய்கள் - பிரதிப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 4 கால்நடைகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில், பாப்பம்பாளையம் அருகே உள்ள காசிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகேசன். இவருடைய மாட்டின் கன்றுக் குட்டியை திங்கள்கிழமை இரவு வெறிநாய்கள் கடித்துக் கொன்றுவிட்டன.

இதேபோல சிவநாதபுரம் மேற்குத் தோட்டத்தைச் சோ்ந்த மணி என்பவரின் ஆடுகளை தெரு நாய்கள் கடித்ததில் 2 குட்டிகள் உயிரிழந்தன. 5 ஆடுகள் காயமடைந்தன. வீரசோழபுரம் அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த, ஓலப்பாளையம் காா்த்திகேயன் என்பவருடைய ஆடுகளை தெருநாய்கள் கடித்ததில் ஒரு குட்டி உயிரிழந்தது. 4 ஆடுகள் காயமடைந்தன.

Advertisement

Advertisement

வெள்ளக்கோவில் பகுதியில் தெரு நாய்களால் கால்நடைகள் உயிரிழந்து வருவது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசு தகுந்த நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments