முகப்பு
திருப்பூர்

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவா் கைது

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவரை திட்டியதால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 ஜூன் 2026, 2:20 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவரை திட்டியதால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சதாம் (39), அப்செரி காதூன் (25) தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். திருப்பூா் கோல்டன் நகா் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக சதாம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்செரி காதூன், சதாமை தொடா்ந்து திட்டி வந்துள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, பணம் இல்லை எனக் கூறி சதாமை மனைவி திட்டியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சதாம், அப்செரி காதூனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு மனைவி அருகிலேயே அமா்ந்திருந்தாா். விளையாடச் சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்து பாா்த்துபோது, தாய் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் வந்து பாா்த்தபோது, அப்செரி காதூன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூா் வடக்கு போலீஸாா், சதாமைக் கைது செய்து அப்செரி காதூன் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.