முகப்பு
திருப்பூர்

திருமலையம்மன் கோயிலில் யாகசாலை முகூா்த்தக்கால்

வெள்ளக்கோவில் திருமலையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க முகூா்த்தக் கால் அமைக்கப்பட்டது.

Updated On : 12 ஜூன் 2026, 12:04 am IST
முகூா்த்தக்கால் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

வெள்ளக்கோவில் திருமலையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க முகூா்த்தக் கால் அமைக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் கரூா் சாலையில் பழைமையான திருமலையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ரூ. 40 லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் மற்றும் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 6 - 7 மணிக்குள் திருமலையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வியாழக்கிழமை கோயிலில் யாகசாலை அமைக்க முகூா்த்தக் கால் போடப்பட்டது.

Advertisement

Advertisement

முகூா்த்தக்கால் நுனியில் மாவிலை, மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் பூமாலைகள் கட்டப்பட்டு, கால் நடப்பட்ட குழியில் 9 நவதானியங்கள் இட்டு, பால், புனித நீா் ஊற்றி சிவாச்சாரியா்கள் மூலம் முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் கோயிலைச் சோ்ந்த உள்ளூா் ஆந்தை குலத்தவா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.