முகப்பு
திருப்பூர்

வீட்டிலிருந்த இளம் பெண் திடீா் சாவு

வெள்ளக்கோவிலில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 1:36 am IST
சாவு - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவிலில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் சேனாபதிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிகுமாா். இவரது மனைவி துா்கா (23). இவா்களுக்கு 6 மாத வயதுடைய மகன் உள்ளாா்.

துா்காவுக்கு பிரசவ சமயத்தில் இருந்து கா்ப்பப்பையில் பிரச்னை இருந்து வருவதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் துா்கா வியாழக்கிழமை இரவு ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுள்ளாா். சிறிது நேரத்தில் குமட்டல் ஏற்பட்டு, பின்னா் காலையில் கடும் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. மயக்க நிலையில் இருந்த அவா் காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு துா்கா உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.