முகப்பு
திருப்பூர்

லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 20 ஜூன் 2026, 1:13 am IST
மோகன்குமாா்.
பகிர்:

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (38), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (36), மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லையாம்.

இந்நிலையில், மூலனூரில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் ரேவதி தங்கியுள்ளாா். அவரைப் பாா்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு மோகன்குமாா் வீடு திரும்பியுள்ளாா். வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோகன்குமாா் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments