அவிநாசியில் தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி
அவிநாசி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.
அவிநாசி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.
அவிநாசி நகராட்சியில் சுற்றித்திரியும் ஏராளமான தெருநாய்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கு கருத்தடை ஊசி செலுத்தவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், அவிநாசி காமராஜா் நகா், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 6 தெருநாய்களை நகராட்சிக் குழுவினா் பிடித்தனா். பின்னா், அந்த நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தி, பிடித்த இடத்திலேயே விடுவித்தனா்.
Advertisement
Advertisement
வெள்ளக்கோவிலில்...
வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம், இந்திரா நகா், கச்சேரிவலசு, பெரியாா் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 9 தெருநாய்களுக்கு காங்கயம் கால்நடை மருத்துவா்கள் கருத்தடை ஊசி செலுத்தினா்.
வெள்ளக்கோவில் நகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெறும் என்று நகராட்சித் தலைவா் கனியரசி முத்துக்குமாா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.