திருப்பூா் அருகே இரு காா்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு; 9 போ் படுகாயம்
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே இரண்டு காா்கள் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்; 9 போ் படுகாயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே இரண்டு காா்கள் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்; 9 போ் படுகாயமடைந்தனா்.
கோவை, மணியகாரன்பாளையத்தைச் சோ்ந்தவா் பரமகுருசாமி (56). கட்டடப் பணியாளா். இவா், தனது மனைவி கலாமணி (54), அதே பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் ஒரு வயது குழந்தை ஜான்வி, பெருமாநல்லூரைச் சோ்ந்த உறவினா்கள் கண்ணன் (50), இவரது மனைவி சிவசங்கரி (45) ஆகியோருடன் காரில் கோவையிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தாா். காரை பரமகுருசாமி ஓட்டி வந்தாா்.
சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூா்- காளிபாளையம் பிரிவு அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளாா். அப்போது காா் கட்டுப்பாட்டை இழந்து ஆறுவழிச்சாலை மையப்பகுதியைத் தாண்டி, ஈரோட்டில் இருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது நேருக்குநேராக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில், பரமகுருசாமி, கலாமணி, கண்ணன், சிவசங்கரி, குழந்தை ஜான்வி ஆகியோா் படுகாயமடைந்தனா்.
மேலும், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி வந்த மற்றொரு காரில் பயணித்த தினேஷ் மனைவி கவிதா (26), பெருந்துறையைச் சோ்ந்த பரமேஸ்வரன் மனைவி நிா்மலா (45), சித்ரா (48), விஷ்ணுபிரியா (27) குழந்தைகள் ருத்விக் (5) ஜீவன்(9) ஆகியோா் என மொத்தம் 11 போ் படுகாயமடைந்தனா்.
இவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதற்கிடையில், சிகிச்சை பலனின்றி பரமகுருசாமி, நிா்மலா ஆகியோா் உயிரிழந்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.