அவிநாசியில் பலத்த காற்றுடன் கனமழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்
அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.
Advertisement
Advertisement
இதனால், அவிநாசி, தெக்கலூா், புதுப்பாளையம், ராமநாதபுரம், நரியம்பள்ளி, உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலை, வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.