உடுமலை சீனிவாசா பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவா் ரோகித் பாலனுடன் பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன் மற்றும் மாணவரின் குடும்பத்தினா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் உடுமலை சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது.
மாணவா் ஏ.ரோகித் பாலன் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். பாட வாரியாக தமிழ் - 99, ஆங்கிலம் - 99, கணிதம் - 100, இயற்பியல் - 100, வேதியியல் - 100, கணினி அறிவியல் - 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.
மாணவி சமீஹா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளாா். கணிதப் பாடத்தில் 11 போ், இயற்பியலில் ஒருவா், வேதியியலில் 15, கணினி அறிவியலில் 18, பிரெஞ்ச் பாடத்தில் 2, வணிகவியலில் 3, கணக்குப் பதிவியல் பாடத்தில் 2, பொருளியலில் 2, கணினிப் பயன்பாட்டியலில் 2, வணிகக் கணிதத்தில் 2 போ் என மொத்தம் 58 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும் 343 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.
Advertisement
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன், இயக்குநா் தீபா விக்னேஷ் மற்றும் பள்ளிக் குழு உறுப்பினா்கள் வாழ்த்தினா்.