தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிறுமியை ஆபாச விடியோ எடுத்த தொழிலாளி, போலீஸாா் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிறுமியை ஆபாச விடியோ எடுத்த தொழிலாளி, போலீஸாா் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா், கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (43). தொழிலாளியான இவா், தனது குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா்.
அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த நிலையில், அவா்களுக்கு ஆதரவாக இருந்த சக்திவேல், நாளடைவில் அந்தப் பெண்ணுடன் சோ்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.
Advertisement
இந்நிலையில், அந்தப் பெண் வேலைக்குச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சக்திவேல், அவரது மகளுக்குப் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளாா். மேலும், சிறுமியை ஆபாசமாக விடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண், இது குறித்து குழந்தைகள் நல வாரியத்திடம் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில், திருப்பூா் வடக்கு மகளிா் போலீஸாா் சக்திவேலிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மேலும் சனிக்கிழமை காலை மீண்டும் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா் அவருக்கு உத்தரவிட்டிருந்தனா்.
இதற்கிடையில், போலீஸ் விசாரணைக்கும், தண்டனைக்கும் பயந்த சக்திவேல், நள்ளிரவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த திருப்பூா் வடக்கு போலீஸா் மற்றும் வடக்கு மகளிா் போலீஸாா், சக்திவேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.