FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

அரூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

1 ஜூலை 2026, 7:07 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

அரூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள கோட்டப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு தொழிலாளி ஒருவா் பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.

இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, சிட்லிங் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கோவிந்தனை (56) போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments