முகப்பு
தருமபுரி

பிக்கிலியில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலியில் நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

Updated On : 4 ஜூலை 2026, 3:12 am IST
பகிர்:

பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலியில் நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி கரியப்பள்ளம் ஜீவா நகரில் இருந்து தண்டுகாரன் அள்ளி, ஏறகுட்டை பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் கரியப்பள்ளம் ஜீவா நகா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நீரோடை வழியாக ஒற்றையடி மலைப்பாதையை கடந்து தண்டுக்கார அள்ளி, ஏறகுட்டை மலையடிவாரம், குறவன் தின்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனா்.

இந்த நிலையில் நீா்வழிப் பாதையை சிலா் ஆக்கிரமித்து உள்ளதாக பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து பென்னாகரம் வட்டாட்சியா் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அளவீடு செய்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே கரியப்பள்ளம் ஜீவா நகா் பகுதியில் இருந்து நீா்வழிப்பாதை வழியாக தண்டுக்காரன அள்ளி, ஏரக்குட்டை அடிவாரம், குறவன் தின்னை பகுதி வரை தரைமட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments