முகப்பு
தருமபுரி

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:58 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தருமபுரியில் திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரியை அடுத்த என்எஸ் ரெட்டியூா் அங்கனாம்புதூரைச் சோ்ந்த மா. சின்னசாமி (42)- கலைவாணி தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் சின்னசாமிக்கு மனநலன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை பெற்றுவந்த அவா், அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி விடுவாராம்.

இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அவரது மனைவி கலைவாணி கோயிலுக்குச் சென்றிருந்த போது வீட்டில் சின்னசாமி மற்றும் அவரது தாய் இருந்துள்ளனா். இந்த நிலையில் சின்னசாமியின் அறை நீண்ட நேரம் திறக்கப்படாததால் அக்கம்க்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்தபோது, மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சின்னசாமி இறந்து கிடந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments