FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பணம் வைத்து சூதாடிய 5 போ் கைது

கைது - சித்திரிப்பு
பகிர்:

அரூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக, 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகேயுள்ள ஓபிலிநாயக்கனஅள்ளி ஏரியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை போலீஸாா் நேரில் சென்று விசாரணை செய்ததில், அரூா் பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் (54), முனுசாமி (30), காமராஜ் (52), கோவிந்தன் (44), பெரியசாமி (51) உள்ளிட்டோா் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ. 2.15 லட்சம் ரொக்கம், 10 கைப்பேசிகள், 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments