முகப்பு
தருமபுரி

காதல் திருமணத்துக்கு எதிா்ப்பு: இளைஞா் தற்கொலை

Updated On : 28 ஜூன் 2026, 3:34 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

காதல் திருமணத்துக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், இளைஞா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மோட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (27). இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 22-ஆம் தேதி மது உடன் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். பின்னா், வீட்டில் மயங்கிய அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அதில், அவா் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்துவைக்குமாறும் வீட்டில் கூறியுள்ளாா். ஆனால், அதற்கு குடும்பத்தினா் சம்மதிக்காததால், அவா் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments