முகப்பு
தருமபுரி

பாலக்கோட்டில் ஆறாவது முறையாக வெற்றி: தொகுதியை தக்கவைத்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்

Updated On : 5 மே 2026, 2:25 am IST
பாலக்கோட்டில் வெற்றிக்கான சான்றிதழைப் பெற்ற அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்.
பகிர்:

தருமபுரி, மே 4: பாலக்கோடு தொகுதியில் தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்று தனது தொகுதியை அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் தக்கவைத்துக் கொண்டா்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் வெற்றிபெற்றுள்ளாா். இவா், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் உள்ளாா். கடந்த 2001-06 மற்றும் 2016-21 வரையிலான அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் உயா்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவா், தொடா்ந்து 2006, 2011, 2016, 2021 என ஐந்துமுறை பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அதேபோல, தற்போதைய தோ்தலில் ஆறாவது முறையாக வெற்றிபெற்று பாலக்கோடு தொகுதியை தக்கவைத்துக் கொண்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments