கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நேர்மையாக நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நேர்மையாக ஜனநாயக முறைப்படி நடத்திட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நேர்மையாக ஜனநாயக முறைப்படி நடத்திட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு தலைமை வகித்துப் பேசினார் .
இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் புகாருக்குள்ளான முதல் கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களை ரத்து செய்து, அனைத்து சங்கங்களின் தேர்தல்களை ஜனநாயக முறைப்படி நடத்திட வேண்டும். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விவசாய விளைபொருள்களைப் பதப்படுத்த குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். விவசாயத்தைப் பாதிக்கும், கெயில் நிறுவன எரிவாயு குழாய்களை விளை நிலங்களில் பதிக்கக் கூடாது. மாற்றுப் பாதையில் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெறும் அனைத்துப் போராட்டங்களில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நகரத் தலைவர் செந்தில்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.