முகப்பு
தருமபுரி

பேருந்து வசதியின்றி மாணவர்கள் அவதி

பாலக்கோடு அருகே பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

Updated On : 23 ஜூலை 2018, 9:29 am IST
பகிர்:

பாலக்கோடு அருகே பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் பாலம்பட்டி தோப்பு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப் பகுதியிலிருந்து நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அருகேயுள்ள ராயக்கோட்டை அரசு பள்ளிகளுக்குச் சென்று படித்து வருகின்றனர்.
காலை நேரத்தில் இப் பகுதிக்கு பேருந்து இயக்கப்படாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல் டெம்போ, மினி லாரிகளில் செல்வதாகக் கூறப்படுகிறது. அப் பகுதி வழியாக பாலக்கோட்டிலிருந்து கூலிக்கானூர்  ஓடையாண்ட அள்ளி  வழியாக செல்லும் பேருந்து 9.30 மணிக்கு மேல் வருவதால் மாணவர்களுக்கு பயனில்லாமல் உள்ளது. எனவே, காலை நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments